Tuesday, July 7, 2026

கதீஜா (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு


💜 கதீஜாவை மணம் புரிதல் 💜

💚 நபி (ﷺ) அவர்கள் சிறப்பாக வணிகம் செய்து பெரும் வருவாயுடன் மக்கா திரும்பினார்கள்.

💛கதீஜா(ரலி..) தங்களது பொருளில் இதற்கு முன் கண்டிராத பெரும் வளர்ச்சியைக் கண்டார் . மேலும் மய்ஸராவும் , தான் நபி (ﷺ) அவர்களிடம் கண்ட நற்பண்புகள் , உயர் சிந்தனை, பேச்சில் உண்மை , நம்பகத்தன்மை ஆகியவற்றை கதீஜாவிடம் விவரித்தார்.

💚கணவரை இழந்திருந்த கதீஜாவை பல குறைஷித் தலைவர்கள் மணமுடிக்க விரும்பியபோது அதனை மறுத்து வந்த கதீஜா (ரலி..)தனக்கு ஏற்ற கணவர் முஹம்மது நபி (ﷺ) அவர்கள் தான் என முடிவெடுத்தார் . தனது எண்ணத்தை தோழி நஃபீஸா பின்த் முநப்பிஹ் இடத்தில் தெரிவித்தார்.

💚நஃபீஸா நபி (ﷺ) அவர்களிடம் கதீஜாவின் விருப்பத்தைக் கூற
நபி (ﷺ) அவர்களும் அதை ஒப்புக் கொண்டார்கள்.

💜நபி (ﷺ) அவர்கள் தனது தந்தையின் சகோதரர்களிடம் இதுபற்றிக் கூறினார்கள். அவர்கள் கதீஜாவின் தந்தையுடைய சகோதரரிடம் பேசி திருமணத்திற்கு முடிவு செய்தார்கள்.

💚ஷாமிலிருந்து திரும்பிய மூன்றாம் மாதத்தில் அவ்விருவருக்கும் திருமணம் நடைபெற்றது . அதில் ஹாஷிம் கிளையாரும் முழர் கோத்திரத்தின் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

💜நபி (ﷺ) அவர்கள் 20  வாலிப பெண் ஒட்டகங்களை மஹராகக் கொடுத்தார்கள் . அப்போது கதீஜா (ரழி) அவர்களுக்கு வயது 40 , நபி (ﷺ) அவர்களின் வயதோ 25 ! அவர் அறிவாலும், செல்வத்தாலும், குடும்பத்தாலும் , மிகச்சிறந்த பெண்மணியாக விளங்கினார்.

💛நபி (ﷺ) அவர்களுக்கு இவரே முதல் மனைவி. இவர் மரணித்த பின்பே நபி (ﷺ) அவர்கள் வேறு பெண்ணை மணமுடித்தார்கள்.

💜நபி (ﷺ) அவர்களின் பிள்ளைகளில் இப்ராஹீமைத் தவிர அனைவரும் அன்னை கதீஜாவுக்குப் பிறந்தவர்களே!

❤️முதல் குழந்தை காஸிம். இவருடன் இணைத்தே நபியவர்களுக்கு ‘அபுல் காஸிம்’ என்ற புனைப்பெயர் கூறப்படுகிறது.

💚பிறகு ஜைனப் , ருகைய்யா , உம்மு குல்ஸூம் , ஃபாத்திமா, அப்துல்லாஹ் ஆகியோர் பிறந்தனர் .

💜ஆண் மக்கள் அனைவரும் சிறு வயதிலேயே மரணமடைந்தனர் . பெண் மக்கள் அனைவரும் இஸ்லாம் வரும் வரை வாழ்ந்து, இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத்தும் செய்தார்கள்.

❤️ஃபாத்திமாவைத் தவிர்த்து மற்ற மூவரும் நபி (ﷺ) அவர்களின் காலத்திலேயே மரணமடைந்து விட்டனர்.

💜நபி (ﷺ) அவர்களின் மரணத்துக்குப் பின் ஆறுமாதம் கழித்து ஃபாத்திமா மரணமடைந்தார்.

❤️ கதீஜா(ரலி) அவர்களுடைய சிறப்புகள் ❤️

💙கதீஜா (ரலி) அவர்கள் நபி (ﷺ) அவர்களுடைய முதல் மனைவி.


❤️நபி (ﷺ) அவர்களுக்கு பிறந்த குழந்தைகளில் இப்ராஹீமை தவிர அனைத்து குழந்தைகளும் கதீஜா (ரலி) அவர்கள் மூலமாகவே பிறந்தன.

💚ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ﷺ) அவர்களிடம் வந்து அல்லாஹ் கதீஜாவிற்கு ஸலாம் கூறியதாக கூறினார்.
கதீஜா சொர்க்கத்தில் எந்த கூச்சலுமற்ற வீட்டில் இருப்பார்கள் என நற்செய்தியும் கூறினார்கள்.
அதற்கு கதீஜா ரலி அவர்கள் 'அல்லாஹ் அவனே சாந்தியானவன். அவனிடமே சாந்தி உள்ளது.
ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கும் , உங்களுக்கும் ஸலாம்உண்டாகட்டும்' என பதிலளித்தார்கள்.

💜இப்படிப்பட்ட உயர்ந்த அந்தஸ்து உடைய பெண்மணி ஆக திகழ்ந்தார்கள்.

🕋 கஅபாவை செப்பனிடுதல்,
நபி (ﷺ) அவர்கள் நடுவராகுதல்:

🔰நபி (ﷺ) அவர்களின் 35வது வயதில் குறைஷியர்கள் கஅபாவைப் புதுப்பித்தனர்.

🕋 கஅபா, ஓர் ஆள் உயரத்திற்குப் பாறைகளால் கட்டப்பட்டிருந்தது . அது இஸ்மாயீல் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே மேல்முகடு இன்றி ஒன்பது முழம் கொண்டதாக இருந்தது.

🔰அதன் சுவரும் கட்டடங்களும் சிதிலமடைந்து இருந்தன. இந்நிலையில் கஅபாவினுள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷங்களை ஒரு கூட்டம் திருடிச் சென்றது.

🕋 நபி (ﷺ) அவர்கள் இறைத்தூதராவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் மக்காவில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கஅபாவின் கட்டடம் மேலும் பாதிப்படைந்தது . அதன்மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாக குறைஷியர்கள் அதைப் புதுப்பிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர்.

🕋 அதனை ஹலாலான (தூய்மையான) வருமானத்தைக் கொண்டே செப்பனிட வேண்டும் ; வட்டி, விபசாரம், திருட்டு போன்ற பொருட்களின் மூலமாக செப்பனிடக் கூடாது என அனைவரும் கூடி முடிவெடுத்தனர்.

🕋 இந்நிலையில் பழைய கட்டடத்தை எவ்வாறு இடிப்பது என அனைவரும் அஞ்சினர்.
வலீத் இப்னு முகீரா மக்ஜூமி கடப்பாரையை எடுத்து “அல்லாஹ்வே! நான் நன்மையை நாடியே இதைச் செய்கிறேன்” என்று கூறி ருக்னுல் யமானி, ருக்னுல் ஷாமியின் பகுதிகளை இடித்தார்.

🕋 அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாததைக் கண்ட குறைஷியர்கள் அச்சம் தெளிந்து, அவருடன் இணைந்து இடித்தனர்.

🔰இறுதியாக , இப்ராஹீம் (அலை) அவர்கள் அமைத்த அஸ்திவாரம் தென்பட்டது.

🕋 பிறகு கஅபாவை பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ஒரு பகுதியைக் கட்ட வேண்டுமென முடிவு செய்து ஒவ்வொரு கோத்திரத்தாரும் ‘பாகூம்’ என்ற ரோமானிய பொறியியல் வல்லுனரின் மேற்பார்வையில் கட்டத் தொடங்கினர்.

🕋 இறுதியாக, ஹஜ்ருல் அஸ்வதின்”  இடம் வந்தபோது அதை அதற்குரிய இடத்தில் வைப்பது யார் என்பதில் பிரச்சனை எழுந்தது.

🔰அது பற்றிய சர்ச்சை நான்கு அல்லது ஐந்து நாட்களாகத் தொடர்ந்தது . சர்ச்சை கடுமையாகி போராக மாறிவிடும் அபாயம் எழுந்தது. அப்போது அபூ உமய்யா இப்னு முகீரா - மக்ஜூமி அம்மக்களிடம் , இப்புனிதப் பள்ளிவாசலில் முதன்முதலாக நுழைபவரை நடுவராக்கி அவரது ஆலோசனையை ஒப்புக் கொள்ளுங்கள்” என்று கூறினார் . இக்கருத்தை அனைவரும் மனமார ஏற்றனர். அவர்கள் ஆவலுடன் காத்திருக்க நபி (ஸல்) அவர்களே முதலாமவராக நுழைந்தார்கள்.

🕋அவர்களைக் கண்ட அம்மக்கள் “இதோ முஹம்மது வந்துவிட்டார். இவர்தான் நம்பிக்கைக்குரியவர். இவரை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்” என்றனர்.

🕋 நபி (ﷺ) அவர்கள் தங்களுக்கு அருகில் வந்தவுடன் விவரத்தைக் கூறினர்.

🕋 நபி (ﷺ) அவர்கள் ஒரு விரிப்பை வரவழைத்து அதன் நடுவே ஹஜ்ருல் அஸ்வதை வைத்தார்கள்.

🔰பிறகு சச்சரவிட்டுக் கொண்டிருந்த கோத்திரத்தாரின் தலைவர்களை அழைத்து விரிப்பின் ஓரங்களைப் பிடித்துத் தூக்குமாறு கூற, அதை அவர்கள் தூக்கினர்.

🕋 கஅபாவுக்கு அருகில் கொண்டு வந்தவுடன் தனது கரத்தால் ஹஜ்ருல் அஸ்வதை எடுத்து உரிய இடத்தில் வைத்தார்கள்.
🔰இது அனைவரும் ஒப்புக் கொண்ட மிக அழகிய தீர்வாக அமைந்தது.

⭐🌙⭐🌙⭐🌙⭐🌙⭐🌙⭐🌙⭐🌙

கதீஜா (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாறு

💜 கதீஜாவை மணம் புரிதல் 💜 💚 நபி (ﷺ) அவர்கள் சிறப்பாக வணிகம் செய்து பெரும் வருவாயுடன் மக்கா திரும்பினார்கள். 💛கதீஜா(ரலி..) தங்களது பொருளி...